Posts

இது என் கதை

திரும்பிப் பார்க்கிறேன் ; திருப்பங்களைப் பார்க்கிறேன் : இது என் கதை எனது கதையை எழுதக்கூடிய அளவிற்கு நான் சிறந்த மனிதன் ஒன்றுமில்லை ; இருப்பினும் , எனது வாழ்க்கை வளைந்து வளைந்து செல்லும் ஆற்றைப்போல் திருப்பங்கள் பல சந்தித்து சென்றுள்ளதைத் திரும்பி பார்க்கும்போது , வாழ்க்கையின் அர்த்தங்களை விளங்கிக்கொள்ளமுடியுமா என்று விழைகின்றேன் ; எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன் ; உங்களுக்கு புரிந்ததை நீங்கள் சொல்லுங்கள் ! 1. முதல் திருப்பம் எனது கிராமம் ஒரு சிறிய கிராமம் ; எனது குடும்பம் ஒரு ஏழை குடும்பம் ; எனக்கு ஒரு அண்ணன் ; ஒரு தங்கை ; எனது பள்ளிக்கூடம் பழைய அரசு பள்ளி ; 9 ஆம் வகுப்புவரை நான் எப்படி படித்தேன் என்பது எனக்கு நினைவில்லை ; நான் அதுவரை ஒரு சராசரி மாணவனாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன் ; நான் 9 ஆம் வகுப்பு படித்தபோது ஒரு புது ஆசிரியர் வந்தார் ...